ta_104318_0 யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன அவர்கள் தனது முப்பது வருட சேவையை பூர்த்தி செய்து இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்ல இருப்பதனால் இவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதை வழங்கி வைக்கப்பட்டன. ta_104318_1 இந்த அணிவகுப்பு மரியாதைகள் யாழ் கோப்பாயிலுள்ள படைத் தலைமையக வளாகத்தினுள் இம் மாதம் (8) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன. ta_104318_2 பின்னர் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் இவர் கலந்து சிறப்பித்தார். ta_104318_3 இவர் 51 ஆவது படைத் தளபதியாக கடமை வகிப்பதற்கு முன்னர் இராணுவ பேச்சாளர் மற்றும் இராணுவ ஊடக பணிப்பாளராக கடமை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.