cheranga-uom
added si-ta data
c7c24dc
raw
history blame
2.34 kB
ta_111691_0 தேசிய மகளீர் தினத்தை முன்னிட்டு 'பெண்களின் உரிமைகள் மற்றும் வன்முறை தொடர்பான செயலமர்வு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இம் மாதம் (2) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றது.
ta_111691_1 இந்த செயலமர்வுகள் இலங்கை மகளீர் சட்டவாக்க சங்கத்தின் தலைவி திருமதி சரோஜினி இளங்கோவன் மற்றும் இலங்கை மகளீர் சட்டவாக்க சங்கத்தின் அதிகாரி திருமதி சுவர்னா ஜயவீர அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.
ta_111691_2 இவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது வேண்டுகோளுக்கமைய இங்கு வருகை தந்து செயலமர்வுகளை நடாத்தினர்.
ta_111691_3 செயலமர்வில் யாழ் குடா நாட்டைச் சேர்ந்த 100 பெண்களும், 7 ஆவது இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த அங்கத்தவர்கள் உள்ளடக்கி முழுமையாக 300 பேர் இணைந்திருந்தனர்.
ta_111691_4 மேலும் இந்த செயலமர்வில் முன்னாள் யாழ் மாவட்ட நீதிவான், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உயரதிகாரியான பிரிகேடியர் பிரியந்த கமகே மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.